தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள்.
தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள்
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் G பிரீட்மான் (Daniel G. Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (reproductive value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார்.
இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம் "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணருகிறீர்கள்" என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள ஆண்களின் முகம் , முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.