Monday, December 31, 2012

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள்.

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள்.

தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள்

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின்  சமூக உளவியல் துறையைச்  சேர்ந்த டாக்டர் டேனியல் G பிரீட்மான் (Daniel G. Freeman) என்பவர்  தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (reproductive value) பற்றி ஓர்  ஆய்வு மேற்கொண்டார்.
இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட  சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம்  "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணருகிறீர்கள்" என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள  ஆண்களின் முகம் , முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

நீங்கள் இறைவனை தேடுபவரா?????????


நீங்கள் இறைவனை தேடுபவரா?????????

அன்பிற்கினிய சகோதர்களே நீங்கள் அகில உலகையும் படைத்து பராமரிக்கும்   ஓர் இறைவனை தேடக்கூடியவரா???
நீங்கள் தேடக்கூடிய இறைவன் கீழ் காணும் தகுதியுடையவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா???
1) இறைவன் ஒரே ஒருவனே
2) அவனே படைக்க கூடியவன்
3) அவனே காக்க கூடியவன்
4) அவனே அழிக்க கூடியவன்
5) அவன் எந்த தேவையும் அற்றவன்
6)அவன் யாரையும் பெற்றவனாக இருக்க கூடாது
7) அவன் யாராலும் பெறப்பட்டவனாகவும் இருக்க கூடாது
8) அவன் சாப்பிடுபவனாக இருக்க கூடாது
9) அவன் தூங்குபவனாகவும் இருக்க கூடாது
10) அவன் சாவுபவனாகவும் இருக்க கூடாது
11) அனைத்தையும் கண்கானிக்க கூடியவனாக இருக்க வேண்டும்
12) அனைத்தையும் பார்க்க கூடியவனாக இருக்க வேண்டும்
13) அனைத்தையும் கேட்க கூடியவனாக இருக்க வேண்டும்
14) அனைத்து ஆற்றலும் அதிகாரமும் உடையவனாக இருக்க வேண்டும்
15) அவனுக்கு நிகராக வேறேதும் இருக்க கூடாது